Spread the love

மாநாடு 16 May 2022

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்ச்ர பொன்முடி ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.இவ்விழாவில் நேரடியாக பட்டம் பெற்ற 931 நபர்களுக்கும் ஆளுநர், முதல்வர் ஆகியோர் ஒன்றே கால் மணி நேரம் நின்று கொண்டு அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார்கள்.

இவ்விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் இந்த நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். பெருமைமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

உலகில் புழக்கத்தில் உள்ள மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு அம்மொழி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலாச்சாரம், பன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் தொழித்துறை பாரம்பரியமும் கொண்டது இந்தியா தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை என்றார். பிரதமர் மோடி குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழ் மொழியை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல மூன்றாவது மொழியாக தமிழை சேர்க்க நான் முயற்சி செய்வேன் என்று பேசினார்.

35230cookie-checkஆளுநரும் முதல்வரும் அமைச்சரும் ஒரே மேடையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!