Spread the love

மாநாடு 8 March 2022

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 2019ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புக் காவலர் மற்றும் சிறைச்சாலை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர் பணிகளுக்கான தேர்வை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தியது.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்நிலையில், 10,070 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 9831 இரண்டாம் காவலர்கள், 1200 தீயணைப்புப் படையினர், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியிடங்களுக்கு 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

23520cookie-check10,070 காவலர் பணி நியமனம் ஆணையை மு க ஸ்டாலின் வழங்கினார்

Leave a Reply

error: Content is protected !!