மாநாடு 12 January 2024
பொங்கல் விழாவை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் அரசுக்கு பெரும் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு :
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளின் வருமானம் என்பது தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரும் வருவாயாக உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி மிகப்பெரிய வருவாய் இலக்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 138 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் விழாவினை ஒட்டி நாளை 13.1.24 முதல் ஒரு வாரம் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி தாங்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்தது போல் ,பொங்கல் விழாவிற்கும் டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் மூலம் அடிக்கடி கண்காணித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அளித்து உதவிட தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் டாஸ்மாக் ஏஐடியூசி பணியாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு நேரில் அளிக்கப்பட்டது.
டாஸ்மாக் பணியாளர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன் தலைமையில், மாவட்ட பொருளாளர் என்.இளஞ்செழியன் மேற்பார்வையாளர் எம்.கருணா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் உள்ளிட்டோர் மனுவினை அளித்துள்ளார்கள்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!