மாநாடு 19 April 2022
சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மது போதை காரணமாக இருக்கின்றது. அது இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் பெண் பாலின வித்தியாசம் இல்லாமலும் அனைவரிடமும் இந்த தீய பழக்கம் பரவி விட்டது அதற்கு மூலகாரணமாக இருந்தது அரசு நடத்தும் டாஸ்மாக் மது கடைகள் என்பது அனைவரும் அறிந்ததே சிறியவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதைக்காக பாதை மாறி செல்லும் சம்பவங்களும் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதை செய்திகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. டாஸ்மாக் நாட்டை மட்டுமல்லாமல் காட்டையும் பாழ் படுத்தி உள்ளதால் நீதிமன்றம் இவ்வாறு கூறியிருக்கிறது.
மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானே வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என வருத்தம் தெரிவித்தனர்.
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இல்லாவிட்டால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
