மாநாடு 23 March 2022
ஒவ்வொரு பொருட்களின் விலையை தீர்மானிக்க அடிப்படைக் காரணியாக இருப்பது எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலைகள் தான். இவ்வாறான பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் மிகப்பெரிய இன்னலை உருவாக்குகிறது.
இப்போது வரிகளுக்கு முன் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோலின் அசல் விலை 42 ஆக, அதாவது 7 ரூபாய் குறைவாக உள்ள நிலையில், மத்திய அரசின் வரி 33 ரூபாயாகவும், மாநில அரசின் வரி 24 ரூபாயாகவும் இருக்கிறது. டீலர் கமிஷன் 4 ரூபாய் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102ஐ தாண்டி விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. எனினும், தேர்தல் முடிந்தபின் நேற்றும், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டாலும் இந்தியர்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டே பழகிவிட்டனர்.
பெட்ரோல் விலையில் பெரும்பகுதி மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாயாக செல்கிறது. உதாரணமாக, டெல்லியில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் அந்த 100 ரூபாயில் 45.3 ரூபாய் வரியாக போய்விடுகிறது. அந்த 45.3 ரூபாயில் மத்திய அரசுக்கு 29 ரூபாயும், மாநில அரசுக்கு 16.3 ரூபாயும் கிடைக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் 100 ரூபாய் பெட்ரோலுக்கு வரியாக எவ்வளவு ரூபாய் போகிறது என்பது பற்றி தெரியுமா? நமது தமிழ்நாட்டில் 100 ரூபாய் பெட்ரோலுக்கு 48.6 ரூபாய் வரியாக செல்கிறது. புதுச்சேரியில் 42.9 ரூபாய் வரியாக செல்கிறது.
மற்ற மாநிலங்களில்:
கேரளம் – ரூ.50.2 ரூபாய்
லட்சத்தீவு – ரூ.34.6
ஆந்திரப் பிரதேசம் – ரூ.52.4
கர்நாடகா – ரூ.48.1
அந்தமான் நிகோபார் – ரூ.35.3
தெலங்கானா – ரூ.51.6
கோவா – ரூ.45.8
மகாராஷ்டிரா – ரூ.52.4
ஒடிசா – ரூ.48.9
சத்தீஸ்கர் – ரூ.48.3
மத்தியப் பிரதேசம் – ரூ.50.6
குஜராத் – ரூ.44.5
டாமன் டயு – ரூ.42
ராஜஸ்தான் – ரூ.50.8
மேற்கு வங்கம் – ரூ.48.7
ஜார்கண்ட் – ரூ.47
பீஹார் – ரூ.50
உத்தரப் பிரதேசம் – ரூ.45.2
டெல்லி – ரூ.45.3
ஹரியானா – ரூ.45.1
பஞ்சாப் – ரூ.44.6
ஜம்மூ காஷ்மீர் – ரூ.45.9
லடாக் – ரூ.44.6
இமாசலப் பிரதேசம் – ரூ.44.4
உத்தராகண்ட் – ரூ.44.1
சிக்கீம் – ரூ.46
மேகாலயா – ரூ.42.5
திரிபுரா – ரூ.45.8
அசாம் – ரூ.45.4
அருணாசல் பிரதேசம் – ரூ.42.9
நாகாலாந்து – ரூ.46.4
மணிப்பூர் – ரூ.47.7
மிசோரம் – ரூ.43.8