தங்க நகைகள் வாங்க சரியான நேரம் இது..
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் இன்று (ஜனவரி 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,537 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,542 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 36,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரம்
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,704 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,500 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,500 ஆகவும், கேரளாவில் ரூ.4,502 ஆகவும், டெல்லியில் ரூ.4,706 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,726 ஆகவும், ஒசூரில் ரூ.4,537 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,533 ஆகவும் இருக்கிறது