மாநாடு 4 May 2022
தமிழ்நாட்டில் மணல் திருட்டுக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது .அதன் காரணமாக ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மணல்கள் திருடு போய் கொண்டு இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்தது அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கே சேதமடைந்த பிரிட்ஜ் பெட்டிகள் மிதந்து கொண்டிருந்தது அந்த பெட்டிக்கு அந்தபுரம் மறைவாக இருந்து கொண்டு மண்வெட்டியால் மணல்களை வாரி அள்ளி போட்டுக்கொண்டிருந்தார்கள் இப்படி பல பெட்டிகள் ஆங்காங்கே மணல் திருட்டில் ஈடுபடுவதை காணமுடிந்தது. இவ்வாறாக திருடப்படும் மணல்களை லாரிகள் மூலம் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று தெரியவருகிறது.




ஒரு அங்குல ஆற்று மணல் உருவாக நூறு வருடம் ஆகும் என்கிறார்கள். அதுவும் சரியாக மழை பொழிந்து இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே மணல் கிடைக்கும் நிலை இவ்வாறு இருக்க சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் வேளையில் இது போன்ற மணல் திருட்டை கட்டுப்படுத்தாமல் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ஆற்றில் பல இடங்களில் மணல்கள் திருடப்பட்டு வருவதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களையும் நமது மாநாடு இதழிலும், மாநாடு யூடியூப் சேனலிலும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறான மணல் திருட்டுக்கள் யாருக்கும் தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை.
ஆறு செத்தால் யாரும் வாழ முடியாது என்ற உண்மையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
