மாநாடு 29 May 2022
பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பாராட்டால் தஞ்சை மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் 89வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தமக்கு தஞ்சாவூர் பொம்மையை பரிசளித்துள்ள தஞ்சை சுய உதவி குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தாங்களே கைவினைப்பொருட்கள் தயார் செய்து விற்கும் முயற்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுப்பட்டு இருப்பதாகவும் புவிசார் குறியீடுகளை பெற்ற பொருட்களை தவிர பிறபொம்மைகள், வெண்கல விளக்குகள் போன்றவற்றையும் அவர்கள் தயாரிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் பேச்சுக்கு தஞ்சை மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துள்ளார்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மகளிர் அலுவலர் முயற்ச்சியால் தஞ்சை இரயில் நிலையம் அருகே மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழுக்கள் பொருட்கள் தயாரிக்கப்படும் பொருட்கள் இங்கு விற்கப்படுவதால் பல பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் பாராட்டு தங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் தெரிவிக்கின்றார்கள்.