மாநாடு 27 June 2022
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக தஞ்சாவூர் உதவி செயற்பொறியாளர் கருப்பையா இந்த பகுதிகளில் 28-6-2022 நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
ஆற்றுப்பாலம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதாலும், மின்கம்பிகளை மாற்ற வேண்டி இருப்பதாலும், நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஆற்றுப்பாலம், அரசு ஜூவல்ஸ், மார்கெட், ஜி.வி.காம்ப்ளக்ஸ் ,பனகல் கட்டிடம், ஆனந்தம் சில்க்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதேபோல தமிழ் நகர், ஏ.ஆர்.எஸ். நகர், நாஞ்சிக்கோட்டை உழவர் சந்தை, முதல் முருகன் கோயில் வரை ராஜராஜன் நகர், சித்ரா நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு: 1912 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.