மாநாடு 04 January 2023
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று முதல் மார்ச் 15 வரை உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் அறிவுறுத்தல்
கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிம் பெறுபவர்கள் 2023 ஆம் ஆண்டிற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவரவர்கள் பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் இன்று ஜனவரி 4ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் பெண் ஓய்வூதியர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் பெற்று சென்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கும்பகோணம் மண்டல ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் போக்குவரத்து ஓய்வூதியர்களை அறிவுறுத்துகிறது,
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் கீழராஜாவீதி அரண்மனை எதிரில் உள்ள மாவட்ட ஏ ஐ டி யூ சி அலுவலகத்திற்கு வரலாம் மற்றும் கும்பகோணம் மண்டல ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை அவர்களை 9566715758 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏஐடியூசி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.