மாநாடு 08 February 2023
தஞ்சாவூர் மேம்பாலத்தில் இருந்து ராமநாதன் மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை நீர் பாதையில் பொங்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு பெரும் துர்நாற்றம் வீசுகிறது, போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கிறது.இதன் அருகிலேயே சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, அனைத்து மகளிர் காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், புதிய நீதிமன்றம், உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல்
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் எதிரிலேயே பல மணி நேரங்கள் இவ்வாறாக சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடி கொண்டிருக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பும், சாலை விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயமும் இருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்த சாலையில் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு பேரணி போகிறார்கள்.
இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுத்தும் அளவிற்கு சாக்கடை நீர் வழிந்து சாலை முழுவதும் போகிறது. அதனை நடத்துபவர்கள் இதனை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/el/register?ref=IQY5TET4
Can you be more specific about the content of your enticle? After reading it, I still have some doubts. Hope you can help me.