Spread the love

மாநாடு 6 February 2022

நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

அந்த மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலையில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் பல காரணங்களால் பல கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கிறது.

இதில் போட்டியிட மொத்தம் 836 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். அதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

19வது வார்டுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் முரளிதரன் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

32வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமார் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

16வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் புண்ணியமூர்த்தி அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

31வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ரமேஷ் அவர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

27வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தங்கம்மாள் அவர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

46வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் சிவகுமார் அவர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

27வது வார்டுக்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ராணி அவர்களின் மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது.

20வது வார்டுக்கு திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் சாதிக் பாட்சா அவர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி நகராட்சி பேருராட்சி வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விபரங்கள்:

தஞ்சாவூர் மாநகராட்சி வார்டுக்கு – 836 வேட்புமனுக்களும்,நகராட்சி வார்டுக்கு -361 வேட்புமனுக்களும், பேரூராட்சி வார்டுக்கு -1670 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

15730cookie-checkதஞ்சையில் பரப்பரப்பு அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் அமமுக கட்சியின் 8 வேட்புமனுக்கள் நிராகரிப்பு 51 நாம் தமிழர் கட்சியின் மனுக்களும் ஏற்பு

Leave a Reply

error: Content is protected !!