Spread the love

தஞ்சையில் பரப்பரப்பு
அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்.

தமிழ்நாட்டில் எழில்மிகு நகரம் அதாவது smart city திட்டத்திற்காக

25-06-2015 அன்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 11 நகரங்களில் தஞ்சாவூரும் அடங்கும் அதற்கான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி இன்றுவரை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

தஞ்சாவூர் நகரம் என்பது மிகவும் தொண்மையானது.
கட்டிட கலையில் சிறந்து விளங்கிய ஊர் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் உலகத்தினரை ஆச்சரியப்பட வைக்கிறது.

இராண்டயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நதியில் அணைகட்ட முயற்சி செய்து பல முறை தோல்வி அடைந்த நேரத்தில் அதே சமக்காலத்தில் தான் எங்கள் தஞ்சாவூரில் கல்லணை கட்டி வேகமாக ஓடுய நீரைத்தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று உலகுக்கே காட்டி முன்மாதிரியாக திகழ்ந்தார் மன்னர் கரிகால் சோழன்,

அதன்பிறகு கால ஓட்டத்தில் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. எந்த ஊரிலும் வாழ முடியவில்லை என்றாலும் தஞ்சம் என்று புகுந்தால் நமது பஞ்சம் போக்கும் தஞ்சாவூர் என்று பல மாவட்டங்களில் இருந்தும் தஞ்சாவூரில் குடியேறி இன்று தொழில் அதிபர்களாகவும், கல்வி கல்லூரிகளை நடத்தி சமூகத்தில் மேன்மையாக வாழ்பவர்களும் இன்று தஞ்சையில் அதிகம்.

ஆனால் தஞ்சாவூரை பூர்விகமாக கொண்டு மேன்மையோடு வாழ்ந்த மக்களின் வாரிசுகள் இன்று மானத்தையும், தங்களது குடும்பத்தையும், காப்பாற்றுவதற்கு கடும் துன்பத்தை அனுபவித்து உயிரை பணயம் வைத்து தான் பிழைக்க வேண்டும் என்று சொன்னால் அதிர்ச்சியாக தானே இருக்கிறது அதே நேரத்தில் இதுதான் உண்மை .

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தஞ்சாவூரில் ஒரு வீதியில் நுழைந்தால் அந்த வீதி முழுவதும் அந்த பொருட்களாகவே இருக்கும் உதாரணமாக அய்யங்கடை தெருவிற்கு போனால் போதும் தங்க நகைகள் , வெள்ளி நகைகள் வாங்க அதை சரிசெய்ய என ஆபரணத்திற்கான அனைத்தும் அங்கயே செய்து ஒரு திருமணத்தையே முடித்துவிடலாம். இப்படியாக தான் தஞ்சாவூரில் ஒவ்வொரு பகுதிகளுமே இயல்பாகவே அமைந்திருந்தது.

அதன் பிறகு பேருந்துகள் வந்து நிற்க பயணிகள் பயன்படுத்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது அந்த இடம் தஞ்சையின் நகர்மன்றத்தலைவராக இருந்த அய்யாசாமி வாண்டையார் அவர்களுடையது பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.

அதன் பிறகு பெத்தனன் நாடார் காலத்தில் ஒரு தேநீர் குடிக்கவோ எதுவும் பசிக்கு சாப்பிட பெண்கள், குழந்தைகள் வெளியே சென்று வர வேண்டிய நிலை இருக்கிறது அவர்களின் கஷ்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தானாம் டீக்கடைகள், மற்ற கடைகளும் பேருந்து நிலையத்தில்  கட்டப்பட்டதாம்.

அனைவரின் கஷ்டத்தையும் குறைக்க கட்டப்பட்ட கடைகள் தான் இன்று தஞ்சையில் வியாபாரிகள், கடைகள் நடத்துபவர்கள் என்று பெரும்பாலானவர்களை துன்பத்தில் தள்ளி இருக்கிறது.

ஆம் அங்கு புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் பல காரணங்களால் கடைகள் வாடகை உயர்ந்து ஆரம்ப வாடகையே மாதம் ஐம்பதாயிரம் ஏலம் போனது.

தமிழகத்தில் நகராட்சி கடைகள் ஏலத்தில் இதுவே அதிகம் என்று தெரியவந்தது. இந்த வரலாற்று சாதனையை படைத்தவர் தஞ்சை ஆணையர் சரவணக்குமார் அவர்கள். பேருந்து நிலையத்தில் கடைகள் இவ்வளவு ரூபாய் ஏலம் போனதும், நகர்ப்புற சாலைகள், கழிவுநீர்,வடிகால் மேம்பாட்டு திட்டத்திற்காக அண்ணாசாலை பர்மாபஜாரில் இருந்த கடைகளும், நகரத்தை சுற்றி இருந்த நகராட்சி கடைகளை மாநகராட்சி காலி செய்ததும் போதும்..

தஞ்சை பேருந்து நிலையம் சுற்றி நகரத்தில் இருந்த மிகவும் பழைய கட்டிடங்களில் , மருத்துமனைகளில் வாடகைக்கு கடை விட்டிருந்த தனியார் உரிமையாளர்கள் அனைவரும் ஒரே போல வாடகையை பன்மடங்கு உயர்த்தியும், இவ்வளவு வாடகை தர முடியாத நிலையில் இருப்பவர்களை காலி செய்யும் கொடுமையும் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்த இடங்களில் இருப்பவர்களுக்கும் வேறு வழி இல்லாமல் வாழ்க்கையை தள்ளி வருகிறார்கள்.

ஒரு மாநகராட்சியின் வரிவருவாய்க்கு உட்பட்ட பகுதியில் எந்த அடிப்படை வசதிகள் இல்லாத கடைகளுக்கு இவ்வளவு வாடகை உயர்வு செய்யலாமா?

இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமாக பழுதடைந்த பழைய கட்டிடங்கள், மருத்துவமனைகள் வெளியில் சீர்செய்தது போல இருந்தாலும் கட்டிடங்களின் உறுதி தன்மையையும், வாடகை உயர்வையும் ஆய்வு செய்து மக்களின் வாழ்வாதரத்தையும், உயிரையும் காக்க வேண்டிய கடமை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இருக்கிறது.

இன்று 24-01-2022 மாலை அதுவாகவே பர்மாபஜார் பகுதியில் கட்டிடத்தில் இருந்து இடிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.

அதிகமாக மக்கள் கூட்டம் போக்குவரத்து உள்ள பகுதி இது எதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

Location:   https://goo.gl/maps/vAspoYfXb1tSkLNS8

 

9800cookie-checkதஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதத்தை தடுக்குமா? மாநகராட்சி
2 thoughts on “தஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதத்தை தடுக்குமா? மாநகராட்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!