மாநாடு 30 June 2022
வரம் வேண்டி வருபவர்களுக்கு வராமல் இருந்ததில்லை எங்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் என்று அனைவராலும் கூறப்படும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டினான் அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யும் போது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு மன்னன் கனவில் அம்மன் தோன்றி தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து கும்பிடும்படி கூறவே, மன்னன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்மன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கியுள்ளார்.
1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்மனை வழிபட்டு குணமானாள். அம்மனின் பேரருளை அருளை எண்ணி அந்த மன்னன் அம்மனுக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
இங்கு உள்ள சுயம்பு அம்மன் – மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.
விஷ்ணு துர்க்கைக்கும் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்மனுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அந்த சமயம் ஒரு மண்டலம் அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்கு தான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்மனுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேக நேரத்தில் அம்மனின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்மனின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்மனுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.
இந்து சமய அறநிலையை ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த எண்பத்தியெட்டு திருக்கோவில்களில் ஒன்று. தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும் தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்சவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்சவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பலக்கு மிகப் பிரம்மாண்டமானதாகும். முத்துப்பல்லக்கு, ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்மனை தரிசித்து பேரானந்தம் அடைவர். வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும். இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது இதனால்தான் நாடி வந்தவர்களை ஓடிவந்து காக்கும் தெய்வம் எங்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் என்கிறார்கள் பக்தர்கள்.
வழி வரைபடம்:
8bbvx0
I like what you guys are up also. Such smart work and reporting! Carry on the superb works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my site 🙂
Howdy! I know this is kinda off topic but I was wondering if you knew where I could locate a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!
Good info. Lucky me I reach on your website by accident, I bookmarked it.
With havin so much content and articles do you ever run into any issues of plagorism or copyright infringement? My website has a lot of completely unique content I’ve either created myself or outsourced but it appears a lot of it is popping it up all over the web without my permission. Do you know any solutions to help protect against content from being stolen? I’d definitely appreciate it.
92qxzs
gtslbs
3gxjba
duo6se
Hmm it appears like your site ate my first comment (it was super long) so I guess I’ll just sum it up what I submitted and say, I’m thoroughly enjoying your blog. I as well am an aspiring blog blogger but I’m still new to everything. Do you have any helpful hints for inexperienced blog writers? I’d certainly appreciate it.
Would you be considering exchanging links?
I must show my affection for your kind-heartedness giving support to those individuals that really need guidance on that area of interest. Your real dedication to passing the solution all through has been unbelievably powerful and has all the time allowed folks much like me to get to their dreams. This important information implies a whole lot to me and somewhat more to my colleagues. Best wishes; from each one of us.
It’s really a great and useful piece of info. I’m satisfied that you simply shared this useful info with us. Please keep us up to date like this. Thank you for sharing.