மாநாடு 26 January 2022
மீனாட்சி மருத்துவமனையில் மீண்டும் அட்டூழியமா
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது மீனாட்சி மருத்துவமனை
இதில் வடசேரியைச்சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணி ஹரிணி 34 வயதுடையவர் இவர் கணவர் பெயர் அருள் பிரகாசம் தனது மனைவி ஹரிணிக்கு விபத்து ஏற்பட்டு அதற்காக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்து இருந்தார்களாம் 24-01-2022, 25-012022 ஆகிய இரண்டு நாட்களும் சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு
பணம் கட்ட வேண்டும் என்று கூறி ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கப்பட்டதாகவும் ஆனால் நேற்று இறந்து விட்டதாக கூறினார்களாம் அதை பார்த்த உறவினர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்ப்பட்டதாகவும்
அறுவை சிகிச்சையே செய்ய வில்லை என்று தெரிய வந்ததாகவும் தவறான சிகிச்சையால் அந்த கர்பிணி பெண் இறந்ததற்கும், ஏழை எளிய மக்களிடம் நம்பிக்கையோடு வாங்க நாங்கள் இருக்கிறோம் என்று நம்பும் படியாக விளம்பரங்கள் செய்து அடாவடியாக பணமோசடியில் ஈடுபடும் மீனாட்சி மருத்துவமனையிடம் நியாயம் கேட்டு இனி தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் வந்து கொண்டு இருப்பதாகவும்
இன்று 26-01-2022 மீனாட்சி மருத்துவமனையை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் மு.கந்தசாமி நம்மிடம் கூறினார்.
இந்த மருத்துவ மனையில் நடக்கும் அநியாயங்களை நியாயமான ஊடகங்கள் அவ்வப்போது செய்திகள் எடுத்து போட்டும் கூட நடவடிக்கைகள் எதுவும் இல்லையாம்.
எல்லா வகையிலும் ஆட்களை வைத்து பணம் கொடுத்து அந்த செய்தியே மறைக்க பட்டுவிடுவதாகவும், இங்கு கட்டும் பணம் முழுவதற்கும் ரசீது தரப்படுவதில்லை என்றும் சிலர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இனியாவது தஞ்சை மக்களுக்கு விடிவு பிறக்குமா?