மாநாடு 4 மே 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. பதவியேற்ற உடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னைச் சுற்றி சிறந்த ஆலோசனைகளை வழங்க பல்வேறு மட்டத்தில் உள்ள சிறந்த அதிகாரிகளை நியமித்தார்.
மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராக அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்கப்பட்டவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் இவர் தலைமைச் செயலராக பொறுப்பேற்றவுடன் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்கின்ற பெயரில் கண்மூடித்தனமாக சாலைகளின் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் எழுதி அறிவுறுத்தினார்.
இந்த அறிவிப்பு அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கொஞ்சமும் காதில் வாங்காத சில அதிகாரிகள் தனக்கு கமிஷன் கிடைத்தால் போதும் என்கின்ற நோக்கில் பணிகளை கூட நேரில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதன் காரணமாக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது மக்களின் வரிப்பணமும் வீணாக போகின்றது.
இவ்வாறான அதிகாரிகள் பல ஊர்களிலும் பணிகளில் இருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் தனக்கு சம்பளமும் கிம்பலமும் வந்தால் போதும் யார் ஆட்சியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன நமக்கு சேர வேண்டியது சேர்ந்தால் போதும் என்கின்ற நோக்கில் செயல்படுவதால் ..
மக்களின் வரிப்பணம் வீணாகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மானம் போகிறது.
இவ்வாறு அலட்சியப் போக்கில் இருப்பவர்களை அலைபேசியில் அழைத்து தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை இன்னும் நிறைவாக செய்ய அறிவுறுத்தி நமது அரசியல் மாநாடு இதழில் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் அதனால் ஏற்படும் மாற்றங்களை நமது இதழில் வெளியிட்டு வருகிறோம் என்பதை நம்மை பின்தொடரும் வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளராக இருக்கும் கார்த்தி AE கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளும் மிகவும் தரமாற்றவதாக இருக்கிறது என்று தொடர்ந்து நமக்கு தெரிவித்து வந்தார்கள்.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் சிராஜுதீன் நகர் அருகே பெரிய சாலை என்கிற இடத்தில் கட்டப்பட்ட ஆதம் மழைநீர் வடிகால் கால்வாய் பாலம் மிகவும் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட காரணத்தால் கட்டப்பட்டு 10 நாட்களில் இடிந்து விழுந்ததாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் புகார் தெரிவித்து போர்க்கொடி தூக்கினார்கள். அந்த பாலத்தின் பிரச்சனையை கையில் எடுக்க அரசியல் கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது என்கின்ற செய்தியும் நமக்கு கிடைத்தது. தஞ்சாவூர் மாநகராட்சியில் கார்த்தி செயற்பொறியாளராக இருக்கும் பகுதிகளில் போடப்பட்ட சாலைகளும் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் வாய்க்கால்களும் தரமற்றதாக இருக்கின்றது என்பதை நமக்கு தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி செயற்பொறியாளர் கார்த்தியின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இன்று கீழவாசல் 28 வது வார்டு பகுதியில் நாம் சென்று கொண்டிருந்தபோது புதிதாக சாலை போடப்பட்டு சில நாட்களே ஆன சாலையின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை படம் பிடித்து இந்த செய்தியை படிக்கும் உங்களுக்கு கொடுக்கின்றோம்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் கார்த்தி மேற்கொண்ட பணிகளின் முழு விவரத்தையும் அதன் தரத்தையும் பொதுமக்களின் பேட்டியோடு அடுத்து வரும் அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு மாத இதழில் வெளியிடுகிறோம்.