Spread the love

மாநாடு 15 November 2022

ஓடி ஆடி விளையாடி தன் சொந்த காலில் நின்று தான் பிறந்த நாட்டிற்கே பெருமை தேடித் தரும் அரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதுடைய விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா.

இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார், இயல்பாகவே கால்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் உடைய பிரியா மாநில அளவிலான கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் வென்று பல சாதனைகள் புரிந்தார் என்று தெரிய வருகிறது.

இந்நிலையில் காலில் வலி ஏற்பட்டிருக்கிறது அதனால் சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று இருக்கிறார் பிரியா, சோதித்த மருத்துவர்கள் தசைப்பிடிப்பு இருப்பதாக கூறி வலது கால் ஜவ்வு விலகி இருப்பதாகவும் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்து விடலாம் என்று கூறியிருக்கிறார்கள், அதன்படி பிரியாவிற்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது, அப்போது சிகிச்சை நிறைவு பெறும்போது ரத்தம் வெளியேறாமல் இருப்பதற்காக கட்டு கட்டப்பட்டதில் தவறு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் அதாவது கட்டு அழுத்தமாக கட்டி விட்டார்கள் அதனால் தவறு ஏற்பட்டு இருக்கிறது என்று இப்போது கூறுகிறார்கள். தவறாக கட்டு கட்டப்பட்டதும் , தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதுமே காரணம் என்றும் அதன் விளைவாக வலியால் பிரியா துடித்தார் என்றும் அதன் பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ப்ரியா மாற்றப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியாவின் வலது காலை துண்டிக்க வேண்டும் ,தவறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறியிருக்கிறார்கள், வலது கால் அறுவை சிகிச்சை செய்து துண்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7-15 மணியளவில் பிரியா மரணம் அடைந்திருக்கிறார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறும்போது வீராங்கனை பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு அரசின் சார்பாக 10 லட்சம் ரூபாய் பணமும், பிரியாவின் மூன்று சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

தமிழ்நாடு மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேறி விட்டது என்று சொல்லப்படும் போதும் , அரசை வழிநடத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை, அதனால்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களும் , முதன்மை அமைச்சர்களும் தனியார் மருத்துவமனையையே நாடுகிறார்கள்.

இந்நிலை மாற வேண்டும். அரசு மருத்துவமனைகள் பெரும்பாலும் இவ்வாறு அவல நிலையில்தான் இருக்கிறது என்பதற்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே ஆதாரமாக இருக்கிறது, இங்கு பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது, இதனை ஆதாரத்தோடு நமது மாநாடு youtube சேனலிலும் மாநாடு இதழிலும் வெளியிட்டு இருக்கிறோம், அதன் பிறகும் எவ்வித மாற்றமும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செய்யப்படவில்லை தொடர்ந்து நோயாளிகள் அவதிப்பட்டு தான் வருகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

உட்பட ஆய்வுக்கு வருபவர்கள் , முன்கூட்டியே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவலை சொல்லிவிட்டு வருகிறார்கள், இவ்வாறு ஆய்வுக்கு வந்தால், வறுமையில் உள்ளவர்களுக்கு வைத்தியம் எப்படி நல்ல முறையில் கிடைக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து சரி செய்ய வேண்டும். வறு உள்ள இடத்தை முறையாக ஆய்வு செய்து சரி செய்வதன் மூலம் இவர்கள் சரியானவர்கள் என்பதை பலன் அடையும் மக்கள் போற்றுவார்கள். மக்கள் போற்றும் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இனியாவது உண்மையாக நடப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செய்த லிங்க் : https://maanaadu.in/tmch/

தஞ்சாவூர் மருத்துவமனை வீடியோ லிங்க் :https://youtu.be/fP3FxLWopUo

56310cookie-checkதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்தீங்களே பார்த்தீர்களா
2 thoughts on “தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்தீங்களே பார்த்தீர்களா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!