மாநாடு 6 March 2022
நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் தமிழகம், புதுவை, காரைக்காலில் கடும் மழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் கடற்கரையோரம் இருந்த 40 வீடுகள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த கரையோரம் இருந்த 150 தென்னை மரங்களும் வேருடன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்கக் கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.