மாநாடு 29 August 2022
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையுமான மு.கருணாநிதி 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோபாலபுரத்தில் சரபேஸ்வரர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த நேரத்தில் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது, அதனையொட்டி அந்த வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வரர் கருணாநிதியிடம் தனது பேத்தியின் திருமணத்தை தாங்கள் வாழ்ந்த வீட்டில் வைக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்து அனுமதி கேட்டுள்ளார், அதனை ஏற்று கருணாநிதியும் சரோஜாவின் திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளார். சென்னை கோபாலபுர வீட்டில் திருமணம் முடித்த சரபேஸ்வரர் பேத்தி சரோஜா தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் ஊடகங்களில் தனக்கு திருமணமான வீட்டை காண ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார் இதனன அறிந்த முதல்வர் முக.ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு அமெரிக்காவிலிருந்து வாழ்ந்த இல்லத்தை காண வந்த திருமதி,சரோஜா சீதாராமன் குடும்பத்தினரை வரவேற்று உபசரித்து இருக்கிறார்கள். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வீடு என்பது பலரது கனவு! கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு.
தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு.சரபேஸ்வரர் அவர்களிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.
அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர். அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வீடு என்பது முதல்வர் கூறியது போல மிகப்பெரிய வாழ்நாள் கனவு ஒவ்வொருவருக்குமே அதனை உணர்ந்த காரணத்தால் அமெரிக்காவில் வாழ்ந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கும் இவரது மனிதநேயத்தை வரவேற்கிறோம் அதே நேரத்தில் அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு ஒரு மனது அருகில் சென்னையில் தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு ஒரு மனது இருக்காது என்பதை முதல்வர் உணர வேண்டும், ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏதாவது ஒரு பெயரில் பொதுமக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவதை காண முடிகிறது வீடுகள் மட்டுமல்ல கடைகளும் கனவு கூடுதான் என்பதை முதல்வர் உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.