மாநாடு 12 October 2022
சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் 2வது பசுமைவெளி விமான நிலையம் கட்டுவதற்காக பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய் ,ஏகணாபுரம் உட்பட 13 கிராமங்களில் இருந்து அரசு கையகப்படுத்தும் 4,563 ஏக்கர் நிலத்தில் 3,246 ஏக்கர் விவசாய நிலம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, வளர்ச்சி திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பிரிவு 10ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4,563 ஏக்கர் பரப்பளவு நிலங்களை கையகப்படுத்தி சுமார் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் கொண்ட விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி தோராய மதிப்பீட்டில் விமான நிலைய பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.இதனை எதிர்த்து 13 கிராம மக்களும் போராடி வருகிறார்கள், அந்த மக்களுக்கு ஆதரவாக மக்கள் மீது உண்மையாக அக்கறையுள்ள கட்சிகள்,அமைப்புகள் அத்தனையும் துணையாக நின்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்து 13 கிராம மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்: பரந்தூர் விமான நிலையம் அமைவதென்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டாக அமையும், 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற குறிக்கோளை எட்டுவதற்கான மற்றொரு மைல்கல் இந்தத் திட்டம் என்று பெருமிதத்தோடு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக வருகிற 17ஆம் தேதி 13 கிராம மக்களும் சட்டப்பேரவையை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.