Spread the love

மாநாடு 29 October 2022

இன்று காலை தஞ்சையில் துவங்கிய உடல் உழைப்பு தொழிலாளர் சங்க 22 வது ஆண்டு பேரவை கூட்டம் தற்போது தஞ்சை மாவட்ட ஏ ஐ டி யு சி சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து தஞ்சை மாவட்ட ஏ ஐ டி யூ சி உடல் உழைப்பு தொழிலாளர்கள், கீழ்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார்கள் அதன் விவரம் பின்வருமாறு :

நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த நாளிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் .

கல்வி உள்ளிட்ட நல உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் ,

நல வாரியத்தில் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் 1000 ரூபாயை தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 6000 ரூபாயாகவாவது உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசின் இ.ஷ்ராம் பதிவை தொழிலாளர் துறையே முன் நின்று பதிவு செய்வதை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு கே.எஸ்.முருகேசன், ஜி.பானுமதி, ஜி. கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தார்கள் .பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் ஜி. மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர் எஸ்.பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர் வெ.சேவையா. பேரவையில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் தொழிலாளர் சங்கத்தின் 22 ஆவது பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் தி.கோவிந்தராஜன் முன்வைத்தார்.மாவட்ட பொருளாளர் பி.சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் பேரவையினை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு, தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தலைவர் என்.இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் பி.செல்வம் உள்ளிட்டார் பேரவையை வாழ்த்தி பேசினார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் டெல்லியை ஆளுகின்ற முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசு அங்குள்ள உடல் உழைப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 4000 ரூபாய் கொடுத்து வருகிறது அதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இன்றுள்ள விலைவாசி உயர்வில் வெறும் 1000 ரூபாய் என்பது மனிதாபிமான அடிப்படையில் ஏற்புடையதல்ல என்பது மனசாட்சி உள்ள அனைவரும் தெரியும், இதனை உணர்ந்து மாண்புமிகு முதல்வர் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள்.

54780cookie-checkதமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் போதாது தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்
One thought on “தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் போதாது தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்”
  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!