மாநாடு 21 November 2022
திருமணம் கடந்த உறவு என்கிற ஒழுக்கக்கேடான கள்ளக்காதலால் நல்ல முறையில் திருமணம் நடந்து வாழ வேண்டிய இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செந்நீர் குப்பம் என்கிற பகுதியில் கணவரை பிரிந்து அம்சவல்லி என்கிற பெண் தனது 18 வயது மகளான சங்கீதாவோடு வாழ்ந்திருக்கிறார், அம்சவல்லிக்கும் ராஜி என்கிறவருக்கும் கள்ள காதல் இருந்திருக்கிறது அதன் காரணமாக அடிக்கடி அம்சவல்லி வீட்டிற்கு ராஜு வந்து போவது வழக்கமாம், இந்நிலையில் அம்சவல்லியின் மகள் சங்கீதாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் தனது வீட்டில் சங்கீதா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்திருக்கிறார் அவர் அணிந்திருந்த அணிகலன் கம்மல் , கொலுசு , உள்ளிட்டவையும் திருடப்பட்டு இருக்கிறது, கீதாவின் பிரேதத்தை உடற் கூர் ஆய்வு செய்யப்பட்டதில் சங்கீதா பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது, அதே நேரத்தில் ராஜி தலைமறைவாகியிருக்கிறான்.
விசாரணையில் இறங்கிய காவலர்கள் பூவிருந்தவல்லி காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்கள், ராஜி மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது அதனையடுத்து மும்பையில் ராஜுவை கைது செய்த காவலர்கள் மும்பை நீதிமன்றத்தில் நேர் நிறுத்திய பின் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வரும் காவலர்கள் கூறியதாவது : உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராஜு வேலை தேடி மும்பைக்கு சென்று இருக்கிறான் அங்கு ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது அந்த பெண்ணை திருமணம் செய்து 1 மகளும், 2 மகன்களும் இருக்கிறார்கள், இந்நிலையில் சென்னைக்கு வந்த ராஜிக்கும், அம்சவல்லிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது, இதனிடையே தனது முதல் மனைவியை மும்பையில் விட்டு விட்டு வந்த ராஜி சம்பவத்தன்று அம்சவல்லி வீட்டிற்கு வந்திருக்கிறான், அடுத்த மாதம் திருமணமாக இருந்த நிலையில் இருந்த சங்கீதாவை தனது இச்சைக்கு இணங்கும்படி கேட்டு இருக்கிறான், சங்கீதா மறுக்கவே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறான், இக்கொலையை திசை திருப்புவதற்காக சங்கீத அணிந்திருந்த கம்மலையும், கொலுசையும், திருடி சென்றிருப்பது இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும், மேலும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் மும்பையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவன் இவன் என்றும் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.