மாநாடு 22 மே 2023
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநாடு மின்னிதழில் மாநகராட்சியில் மரண குழி என்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம் அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எப்போதும் போல மாநிலத்தின் முதலமைச்சருக்கும் அனுப்பி இருந்தோம் இந்த நிலையில் இன்று அந்த குழியில் மிகவும் சேதமாக உடைந்த நிலையில் விபத்து ஏற்படுத்தும் விதத்தில் இருந்த அந்த மூடியை மாற்றி புதிய மூடி போட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு சென்று பார்த்த போது புதிய மூடி போடப்பட்டிருந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குறையை தீர்த்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்த அத்தனை பேருக்கும் தஞ்சாவூர் மாநகராட்சிக்கும் மாநாடு செய்தி குழுமத்தின் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
மாநாடு செய்தி குழுமம் தொடங்கப்பட்டது மாநகராட்சியை வசை பாடுவதற்காகவோ.. வச்சி செய்வதற்காகவோ அல்ல சரி என்பதை தட்டிக் கொடுக்கவும் தவறு என்பதை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கவும் மட்டுமே.. என்பதை உணர்ந்து பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொண்டால் அப்படி நடப்பவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் செய்தி பண்ணவும் மாநாடு செய்தி குழுமம் தயாராக இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
நாம் செய்தி வெளியிட்ட போது இருந்த படம்
இப்போது சரி செய்துள்ள படம்