மாநாடு 13 March 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அருகில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களை இணைக்கும் சாலை ஓரத்தில் பைப்பு குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழியை ஏறக்குறைய ஒரு வருடங்களாக மூடாமல் இருப்பதால் பல விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.
இதை தடுக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனிடம் அந்த குழியை மூட சொல்லி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அதை மூடாததால் கடந்த வாரம் கூட ஒரு மகிழுந்து இதேபோல விபத்துக்குள்ளானதாக அருகிலுள்ள மக்கள் கூறினார்கள்.
அதிலும் இரவில் இந்தப் பள்ளம் சுத்தமாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லையாம் அதில் புல் செடிகள் முளைத்து இருப்பதால் பகலில் கூட சரியாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லையாம் அதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுவதாக மக்கள் கூறினார்கள்.அருகில் உள்ள கிராம மக்கள்,பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்,பாபநாசம் வரவேண்டிய மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறுகிறார்கள்.
இப்போது கூட இந்தப் பகுதியில் காய்கறி விற்கச் சென்ற வாகனம் அந்தப் பள்ளத்தால் சாய்ந்து விபத்திற்குள்ளானது.அதிலிருந்த காய்கறிகள் கீழே கொட்டி சேதமானது. அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாகனத்தில் இருந்தவர்களையும் வானத்தையும் மீட்டு அனுப்பி வைத்தார்கள்.
இந்த பகுதியில் உள்ள பள்ளத்தை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் தவறினால் மக்களைத் திரட்டி அங்கு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள்.மக்களின் பிரதிநிதியான ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் செய்வாரா பொருத்திருந்து பார்ப்போம்.
செய்தி-ராசராசன்