மாநாடு 14 January 2023
தஞ்சாவூரின் முக்கிய பகுதியாக இன்றும் விளங்கிவரும் பழைய நீதிமன்றங்கள், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த இடங்கள் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போன்ற அரசு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் அந்த கட்டிடங்கள் மற்றும் அந்த இடங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது,
இந்நிலையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி பல நாட்களாக தற்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முன்னெடுப்பில் நடைபெற்று வந்தது.
அதனை இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கீழ்க்கண்டவாறு கூறினார்.
தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை பறவைகள் அடங்கிய பூங்கா, வண்ண மீன்கள் கண்காட்சி, அரிய வகை பழங்கால சிற்பங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பறவைகள் பூங்காவுக்கு செல்லும்போது நமக்கே குழந்தைப் பருவ நினைவுகள் வருகிறது. வெளிநாடுகளில் வாழும் பறவைகள் உள்ளன. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் இந்த அருங்காட்சியம் உருவாகி உள்ளது. பழைய கட்டிடம் பயன்படாமல் இருக்க கூடாது என்பதற்காக அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் தஞ்சை நகரில் மேலும் ஒரு சுற்றுலா தளம் உருவாகி உள்ளது. அருங்காட்சியகம் உருவாக கலெக்டருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு எனது பாராட்டுக்கள் என்றார் .
இந்நிகழ்வில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் ஆர்வலர்களும் பங்கேற்றார்கள்.