மாநாடு 09 மே 2023
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களின் வெளியில் கிராமத்தில் இருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கும் சில படித்தவர்களுக்கும் அரசு அலுவல்களுக்கு மனு எழுத தெரியாத நிலையில் அவர்களுக்கு மனு எழுதித் தருவதற்காகவும் சில ஆலோசனைகள் தருவதற்காகவும் சில நபர்கள் அமர்ந்து கொண்டு மனு எழுதித் தரும் பணிகளை செய்து வந்தார்கள் அதற்காக தொகைகளையும் மக்களிடமிருந்து பெற்று வந்தார்கள். ஆனால் முன்பெல்லாம் இவ்வளவு ஏமாற்று வேலைகள் அங்கு நடைபெற்றதாக தெரியவில்லை ஆனால் சமீப காலமாக இ-சேவை வந்த பிறகும் கூட பொதுமக்களுக்கு சேவை செய்கின்றோம் என்கிற பெயரில் சில ஏமாற்று பேர்வெழிகள் அரசு அலுவலகங்களின் முன்பு உட்கார்ந்து கொண்டு அளவுக்கு அதிகமான தொகைகளை கேட்பதும் ஏன் இவ்வளவு தொகை கேட்கிறீர்கள் என்பவர்களிடம் அடாவடியாக பேசி மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதையும் தொடர்கதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற அதிர்ச்சிகரமான செய்தி நமக்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் அருகில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிளை சிறைச்சாலை நுழைவாயில் முன்பாக மனு எழுதிக் கொடுப்பதாக பெண் ஒருவர் தொடர்ந்து பொதுமக்களை ஏமாற்றி வந்தாகவும் இன்று காலை அப்பெண்ணுக்கும் அவரிடம் மனு எழுத கொடுத்தவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக தெரியவந்தது.
அதனையொட்டி தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே மனு எழுதித் தருவதாக சொல்லப்பட்ட பெண் இருந்த இடத்திற்கு நேரில் சென்றோம் அங்கு குடையும் சில பொருட்களும் சிறிய மேஜையில் இருந்தது .
அந்த பெண்மணி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் மாருதி 800 கார் அருகே நின்று கொண்டிருந்தார் அவரை நெருங்கி காலையில் இங்கு என்ன நடந்தது என்று பேச்சு கொடுத்தோம் காலையில் ஒருவர் அபிடவிட் தயார் செய்து பிரின்ட் எடுத்துக் கொடுக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் அதற்கு இவர் 300 ரூபாய் கேட்டதாகவும் தருவதாக முதலில் ஒப்புக்கொண்டவர்கள் வேலை முடிந்தவுடன் ஏன் நீங்கள் இவ்வளவு காசு கேட்கிறீர்கள் வெளியில் குறைவாக தான் கேட்கிறார்கள் என்று இவரிடம் பிரச்சனை செய்ததாகவும் கூறிவிட்டு அடுத்து நாம் பேச்சு கொடுப்பதற்கு முன் அங்கிருந்து சரி சார் வருகிறேன் என்று சென்றுவிட்டார்.
ஆனால் நமக்கு தொடர்ந்து இந்த பெண்ணை பற்றி வந்த செய்தி பின்வருமாறு : இந்த பெண்ணால் இங்கு அடிக்கடி பல பிரச்சனைகள் வருவதாகவும் அப்பாவி மக்களை ஏமாற்றி ரூபாய் 2000, 3000 என்று பணம் பறித்துக்கொண்டு அவர்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் மிகவும் ஆபாசமாக திட்டி அனுப்பி விடுவார் என்றும் கூறினார்கள்.
இன்றும் அது போல் ஒரு ஏழைப் பெண்ணை ஏமாற்றி திட்டிய பொழுது அவரத தம்பி என் அக்காவை ஏன் திட்டுகிறாய் என்று கேட்டதற்கு அவனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கைகலப்பு ஏற்பட்டதாம்.
மேலும் தாலுக்கா அலுவலகத்தில் இ- சேவை மையம் இருந்தும் இவர் அலுவலகத்தின் வெளியில் அமர்ந்து கொண்டு அலுவலகத்திற்கு வரும் அப்பாவி மக்களை வழிப்பறி செய்வது போல் கணினி ஒன்றை வைத்துக்கொண்டு அனைத்து சான்றிதழ்களும் நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறி பணத்தினை பிடுங்கிக் கொள்வதோடு அப்பாவி பொது மக்களை அலைய வைத்து அவர்களுக்கு எந்த வேலையும் செய்து தராமல் இழுக்கடிப்பதால் மாதத்திற்கு ஒரு முறையாவது இது போல யாரேனும் ஒருவர் கோபமடைந்து அந்த பெண்ணிடம் சண்டை போட்டு அடித்துக் கொள்வார்களாம். இதனால் பெறும் அசம்பாவிதங்கள் ஏற்படவும் உயிர் பலி கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பெண்மணியையும்
இவரைப்போலவே அரசு அலுவலகங்கள் முன்பு எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் அமர்ந்து கொண்டு சில அதிகாரிகளுக்கு தரகு வேலை செய்து கொண்டு பொதுமக்களை வாட்டி வதைக்கும் செயலில் ஈடுபட்டு வருபவர்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மக்களின் கோரிக்கையை ஏற்பாரா ? அசம்பாவிதங்களை தடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.