Spread the love

மாநாடு 16 March 2022

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 Indian Grand Prix 1 தடகள போட்டியின், 200 மீட்டர் பெண்களுக்கான பிரிவில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி சேகர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

யார் இந்த தனலட்சுமி சேகர்? image

திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி சேகர்(23). சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாய் பராமரிப்பில் வளர்ந்தவர். வறுமை குடும்பத்தில் தான் இருந்ததே தவிர அவரது திறமையில் இல்லை.

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், எப்படியாவது இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக பணம் செலவு செய்து தனியாக பயிற்சியாளர் வைத்து பயிற்சி எடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அளவிலான இந்த போட்டிகளில் நேற்று பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், தேசிய அளவில் சிறப்பு வாய்ந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். போட்டியில், தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தேசிய அளவிலான வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பி.டிஉஷா சாதனை முறியடிப்பு

200 மீட்டர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்த தனலட்சுமி, இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு 200 மீட்டர் தடகள போட்டியில் 20.26 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது தனலட்சுமி 20.21 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் ஹீமா தாஸ் 20.24 விநாடிகளில் கடந்துள்ளார். தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நமது மாநாடு இதழின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டும்.

25120cookie-checkவறுமையிலும் பெருமை சேர்த்த திருச்சி தனலட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!