Spread the love

மாநாடு 8 July 2022

ஆன்லைன் ரம்மி மோகத்தால் சைக்கோவாக மாறி தன் மனைவியை படுபயங்கரக் கொலை செய்த கொலைகாரனை காவலர்கள் தேடி வருகிறார்கள்.

திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமயபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை விற்ற நரசிம்மராஜ், அதன் பிறகு தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் தாளகுடி சாய் நகர் அப்துல் கலாம் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீடு விற்று கிடைத்த பணத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு மனக்கசப்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
தனது மனைவி சிவரஞ்சனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறும், கொரோனா சரியானவுடன் வந்து அழைத்து செல்வதாக கூறி குழந்தைகளை ஆந்திராவில் விட்டுவிட்டு தனது தாயுடன் புறப்பட்டு சென்றுள்ளார்.

திருச்சியில் உள்ள சிவரஞ்சனியுடன் அடிக்கடி செல்போனில் பேசும் அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக பேசாமல் இருப்பதை கண்டு, அவரை பார்ப்பதற்காக தாளகுடி சாய் நகருக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு வீடு 3 நாட்களாக பூட்டிக்கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து உள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தொிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பரபரப்படைந்த குடும்பத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சடைந்துள்ளனர். பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் கட்டிலுக்கு கீழே சிவரஞ்சனியின் பிணம் கிடந்துள்ளது.

இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைந்து வந்த காவலர்கள் அங்கு நடத்திய சோதனையில் கத்தி குத்து காயங்களுடன் காணப்பட்ட, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி, பிளாஸ்டிக்கினால் சுற்றி கட்டிலுக்கு கீழே கிடத்தப்பட்டு இருந்துள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக மிளகாய், மஞ்சள் பொடி துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைத்து விட்டு தாயுடன் நரசிம்மராஜ் தலைமறைவாகி இருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தொிய வந்துள்ளது. கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து தப்பி ஓடிய நரசிம்மராஜ், தாய் வசந்தகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

42440cookie-checkதடுத்ததால் மனைவியை கொலை செய்து மஞ்ச தூள் தூவிய சைக்கோ கணவன் பயங்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!