Spread the love

மாநாடு 8 May 2022

திமுகவின் ஓராண்டு சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் ட்வீட் மூலம் திமுகவிற்கு திமுகவின் வாக்குறுதியை நினைவூட்டி கேள்வி கேட்டுள்ளார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிகளுக்குட்பட்ட மலை கிராமங்களில் அரை நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திரு. ஸ்டாலின் அரசு அமைத்து ஓராண்டு முடிந்துவிட்டது.

இப்போது அந்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் வேலையை ஸ்டாலின் அரசின் வனத்துறை அதிதீவிரமாக செய்து கொண்டிருக்கிறது.

ஓராண்டு சாதனை என்று அவர்களுக்கு அவர்களே மார்தட்டிக் கொண்டாடும் இரைச்சலுக்கு இடையே அந்த ஏழை விவசாயிகளின் கண்ணீர் குரல்கள் திமுக அரசின் காதுகளுக்கு எட்டுமா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

33990cookie-checkஇரைச்சலில் ஏழைகளின் குரல் கேட்குமா டிடிவி கேள்வி

Leave a Reply

error: Content is protected !!