மாநாடு 17 September 2022
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்துக்களை,இந்து மதத்தை பின்பற்றுபவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்தார் என்று பலராலும் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் சம்பந்தமாக டிடிவி தினகரன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருப்பதாவது: ஆ.ராசாவை பேச விட்டு திமுகவின் தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார் என்றும், திமுக ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காகவே ஸ்டாலின் திமுகவின் பொது செயலாளரான ஆ.ராசாவை இவ்வாறு பேச தூண்டி விடுகிறார் என்றும் விமர்சித்திருக்கிறார். இவ்வாறு ஆ.ராசா பேசுவது இந்து மதத்தில் உள்ள மக்களை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது, பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது பொறுப்புணர்ந்து, கடமை உணர்வோடு , நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் டிடிவி தினகரன்.
ட்விட்டர் லிங்க் இதோ:https://twitter.com/TTVDhinakaran/status/1571028649222217729?t=PRKyWu7BvouSXsiTruTrrA&s=19