Spread the love

மாநாடு 6 March 2022

உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாணவர்களை கண்டதும் பெற்றோர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.சில மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்ததாக கூறி அமைச்சருக்கு பூங்கொத்து தந்து நன்றி தெரிவித்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில் முதலமைச்சர் உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து சிறப்பு குழுவை அமைத்தார். இதுவரை 771 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர். மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து வீடு செல்லும் வரை எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு குழு உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்ற அக்கறை முதலமைச்சருக்கு உள்ளது. மாணவர்களை உடனே அழைத்து வர ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டது.

உக்ரைனில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்ளதாக தகவல். ஆனால் 2221 தமிழக மாணவர்கள் இது வரை பதிவு செய்து உள்ளனர்.கடைசி மாணவர் வரை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவித்து மீட்பு பணியில் குழு ஈடுப்படும் என்றார்.

உக்ரைனில் இருந்து வந்த மானவி ஆஷியா கூறுகையில்:
அரசு கல்லூரியில் சேர முடியாததால் தான் உக்ரைன் சென்றேன். எங்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி. கார்கிவ் பகுதியில் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம். கல்லூரி விடுதிகளில் இருந்தவர்களுக்கு உணவு கிடைத்தது. குண்டு மழை அதிகமாக கேட்டது.பாதாளத்தில் 5 நாட்கள் இருந்தோம்.

சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், எங்களை மீட்ட விமானப் படையினருக்கும் மத்திய,மாநில அரசுகளுக்கும் நன்றி. 12 நாட்களாக பயணம் செய்து உள்ளோம்.
என்றார்.

குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி திவ்யா கூறுகையில், 27ந் தேதி தொடங்கிய பயணம் இன்று தான் முடிந்து உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என்றார்

23050cookie-checkஅரசு கல்லூரியில் சேர முடியாததால் உக்ரைன் சென்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!