Spread the love

மாநாடு 10 March 2022

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தை மீண்டும் கைபற்றும் நோக்கில் அக்கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடம் நியமித்து விட்டது. இதையடுத்து, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நிர்வாகிகள் இடையே நல்ல சூழலை ஏற்படுத்தவும் பிரியங்கா காந்தி முயற்சி செய்து வந்தார்.

இந்த சூழலில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது இமேஜ் சார்ந்த விஷயம் என்பதாலும், அங்கு ஆட்சியை கைபற்றி விட்டால் நாடாளுமன்றத்தில் அமர்ந்து விடலாம் என்று கூறப்படுவதாலும், அரசியல் கட்சிகளிடையே குறிப்பாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைபற்றியது. சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. எனவே, இம்முறை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேறி விட்டது. அதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததாலேயே அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்று சொல்லப்பட்டது.

உத்தரப்பிரதேச தேர்தல் என்றாலே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும். கடந்த முறை தேர்தலின் போது இதே எதிர்பார்ப்பு நிலவியது. அக்கட்சிக்கு தேர்தல் உத்தியாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோரும் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், பிரியங்கா காந்தி பிரசாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். இந்த முறையும் அதே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், பிரியங்கா களம் இறங்கவில்லை.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், காங்கிரஸ் கட்சி வெறும் நான்கு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் ஏழு இடங்களை அக்கட்சி பெற்றிருந்த நிலையில், இம்முறை மிக மோசமான தோல்வியை அக்கட்சி சந்திக்கவுள்ளது

23850cookie-checkகாங்கிரஸ் படுதோல்வி பிரசாந்த் கிஷோர் உத்தி என்ன ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!