Spread the love

மாநாடு 18 April 2022

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் இடம்பெற்றது. அப்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் டீ பார்ட்டி புறக்கணிப்பு குறித்து அறிக்கை வாசித்தார்.

அதன்பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதையடுத்து,. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பதில் அளித்து பேசினார். அப்போது, வருவாய்த் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

31350cookie-check274 கிராம நிர்வாக அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு

Leave a Reply

error: Content is protected !!