மாநாடு 19 September 2022
தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், தஞ்சாவூர் மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்ட நிகழ்வில் எஸ். நல்லசிவம் எம்.ஏ.மாவட்ட தலைவர் அனைவரையும் வரவேற்று பேசினார், ஆர் வாசுதேவன் மாநில செயலாளர் மற்றும் சி.அருள்முருகன் மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார்கள், ஆர் அழகர்சாமி எம்.ஏ.பி.எல் மாநிலத் தலைவர் தலைமை தாங்கினார். ஆர்.மோகனரங்கம் மாநில பொதுச் செயலாளர், பி.பாலசுப்ரமணியன் மாநில பொருளாளர் , கோ.செந்தில்நாதன் மாநில துணைத்தலைவர், இரா.குபேந்திரன் மாநில துணைத்தலைவர், எஸ்.செந்தில்குமார் மாநில தலைமை நிலைய செயலாளர், ஆர்.பொய்யா மொழி மாநில பிரச்சார செயலாளர், ஜே.சுந்தர்ராஜன் மாநில அமைப்பு செயலாளர், ஆறு.பக்கிரி சாமி மாநில செயலாளர், ஆர் சுரேஷ் மாநில செயலாளர், சு சின்ராசு மாநில செயலாளர், சிவ.ரவிச்சந்திரன் மாநில தணிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்டவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்தக் கூட்டத்தில் தங்களுக்குள்ள பல்வேறு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசிக்கப்பட்டது அதன் விபரம் பின்வருமாறு:
நகர பகுதிகளில் பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைமுறையில் உள்ள T S L R – நகர நில அளவை பதிவேடுகள் மற்றும் வார்டு பிளாக் வரை படம் இந்நாள் வரை வழங்க படாமல் உள்ளது, இதனால் ,நகர்ப்பகுதி கிராம நிருவாக அலுவலர்கள் சாகுபடி விபரம் , மின் இனைப்பு சான்று , நீதி மன்ற வழக்குக்காக ஜப்தி மற்றும் நிலம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் போதும் ,நகர்ப்புற நில வரி U L T வசூலிப்பது உள்ளிட்ட அணைத்து பணிகளிலும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது ,T S L R – முழு புல பட்டா மாறுதல் கிராம நிருவாக அலுவலர்களிடம் வழங்கப்படும் பட்சத்தில் மேற்கண்ட நகர பகுதியில் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பன போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க பட்டது.
மேலும் பல கோரிக்கைகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.