விஜய் மாற்ற சொல்லிவிட்டார்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடிக்கிறார்கள்.
ஆனால் உங்களுக்கு தெரியுமா? முதலில் இந்தப் படத்தில் கதாநாயகியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனை தான் விஜய்யிடம் நெல்சன் பரிந்துரைத்துள்ளார். ஆனால் ப்ரியங்கா மோகன் அண்மையில் சிவகார்த்திகேயனுடன் தொடர்ச்சியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ளதால்
மீண்டும் நெல்சன் இயக்கத்தில் வேண்டாம் என இந்த முறை சற்று வித்தியாசமாக புது காம்பினேஷனாக இருக்கவேண்டும் என கதாநாயகியை வேறு யாரையாவது மாற்றுங்கள் என கூறிவிட்டாராம்.
இதனை அடுத்து தான் பீஸ்ட் படத்தில் பூஜா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நெல்சன் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என ப்ரியங்கா மோகனிடம் நம்பிக்கை வாக்குறுதி அளித்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது