20 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானியும், தளபதியும் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகிறார்கள்.
இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே ராயல்டி வாங்கியிருந்தால் இந்நேரம் அவர் உலக பணக்காரர் வரிசையில் இருந்திருப்பார். இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை.சிறிது காலம் கடந்த பின்பு தான் அந்த ராயல்டி விவகாரமே இளையராஜா தெரியவந்ததாக கூறினார்கள்.
அது தெரிந்த பின்பு தான் அதனை முறைப்படுத்தி தனது பாடல்களுக்கு ராயல்டி வாங்கிவிட்டார். இந்த விவகாரம் சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் எடுத்தது நமக்கு நினைவிருக்கலாம். இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் மறைந்த பாடகருமான SPB கூட இனி தன்னுடைய பாடல்களை மேடையில் பாடும் போது ராயல்டி தரவேண்டும் என கூறியிருந்தார் அது நினைவிருக்கலாம்.
தற்போது அந்த ராயல்டி வாங்கிய பிறகு கோடிக்கணக்கான பணம் மாதம் மாதம் வருகிறதாம். அதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் தனது பட தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க உள்ளாராம்.
இளையராஜா அவர் ஆரம்ப காலத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கையில் ரஜினி, கமலிடம் கால்ஷீட் கேட்டிருந்தாராம் இளையராஜா. தற்போது அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு புத்துயிர் வந்த பிறகு தளபதி விஜயின் கால்ஷீட் கேட்டு இளையரஜா தயாரிப்பு நிறுவனம் சார்பாக பேசப்பட்டு இருக்கிறதாம் இந்த கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் ஆவலுடன் நாமும்…