Spread the love

விஜய் மக்கள் இயக்கம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்தார்.

நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் விஜய் படத்தையும் மக்கள் இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றார்கள் அவர்களை விஜய் அழைத்து வாழ்த்தினார். ஆனால் சென்ற தேர்தலில் விஜய் ஆதரவு வார்த்தை எதுவும் வெளியே தெரிவிக்காத போது தனது தனிப்பட்ட செல்வாக்கில் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் விஜய் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே விஜய் மக்கள் இயக்கத்தினர் விருப்பமாக இருக்கிறதாம்.

10740cookie-checkதேர்தலில் நிற்க விஜய் அனுமதி ரசிகர்கள் மகிழ்ச்சி

Leave a Reply

error: Content is protected !!