தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகம் சென்னை பனையூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் சார்பு அணிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் எப்படி தேர்தலில் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் எந்தெந்த இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தேர்தலை சந்திக்கும் என்பது தெரியவரும்.
122000cookie-checkவிஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது