விஜய் மக்கள் இயக்கம் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகள் கேட்டு பரப்புரையில் ஈடுப்பட போகிறார்கள்.
விபரம் பின்வருமாறு: நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விஜய் மக்கள் இயக்கம் விஜய் அவர்களின் கொடியையும்,படங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அனைத்து மாவட்டச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் மாநிலத் தலைமை ஒப்படைத்தது.
அதனடிப்படையில் வேட்பாளர்களும் பல இடங்களில் தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்து உள்ளார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பில்லா ஜெகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவையும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு தருவதாகவும்.விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக திமுகவிற்கு வாக்குகள் சேகரிக்கவும் செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக சாமானிய விஜய் ரசிகர்களை கேட்க போது அந்த ஊரில் அவர் வெளியிட்டிருக்கிறார்.ஆனால் பல ஊர்களில் மாவட்டச் செயலாளர்களின் விருப்பப்படிதான் பல கட்சிகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள் என்றும் நாங்கள் அண்ணன் விஜய் அவர்களின் ரசிகர்கள் விஜய் அண்ணன் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் கேட்டு அதன்படி தான் செயல்படுவோம் என்றார்கள்.