மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே
பாட்டு வண்டிய தான் கட்டிக்கிட்டு போவான்
என்ற இவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப .
சாட்டிலைடில் சென்று விண்வெளியிலும் இளையராஜா இசை ரீங்காரமிட போகிறது ஆம்
தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட்டில் இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்று முதன்முதலாக விண்வெளியில் ஒலிக்கப் போகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இசை ரசிகர்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய இசை வரலாற்றில் குறிப்பாக தமிழக இசை வரலாற்றில், இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து கடந்து விட முடியாது.
அவரது பாடல்கள் அரை நூற்றாண்டு காலமாக உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களைக்கவர்ந்துள்ளது அவரது மெல்லிசைப் பாடல்களில் மயங்காதவர்களே இருக்க முடியாது.
தற்போது இளையராஜாவின் பாடல்கள் உலக நாடுகளைத் தாண்டி விண்வெளியிலும் ஒலிக்க இருக்கிறது தமிழக மாணவர்கள் உலகின் எடைக்குறைவான சாட்டிலைட்டை தயாரித்து வருகின்றனர்.
இந்த சாட்டிலைட் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று இஸ்ரோ உதவியுடன் விண்ணிற்கு ஏவப்படுகிறது. இந்த சாட்டிலைட்டில் இளையராஜா இசையில் அமைந்துள்ள ஹிந்தி பாடலும் இடம் பெற உள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசை அமைத்துள்ள பாடல் இடம்பெறும் சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த தமிழக மாணவர்கள் குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்வெளியில் ஒலிக்கப்போகும் இந்த பாடல் இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் நிகழ்ந்த புதுமைகளை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும் இனி வரும் காலங்களில் இந்தியா முன்னணி நாடாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் இந்தி பாடலை சுவானந்த் கிர்கிரே எழுதியுள்ளார். அதற்கு இளையராஜா இசையமைத்து இருப்பதாகவும் இந்த இந்தி பாடலை தமிழிலும் வெளியிட இளையராஜா திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராகதேவனையும் , தமிழக மாணவர்கள் குழுவையும் வாழ்த்துகிறது மாநாடு