மாநாடு 8 April 2022
இன்று தஞ்சாவூரில் அண்ணா சாலையில் உள்ள பனகல் கட்டிடம் அருகில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பட்டினி போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளைை சேர்ந்தவர்களும், உழவர் பெருங்குடி மக்களும், சட்ட வல்லுநர்களும் ,மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும்,
பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் ,சமூக செயற்பாட்டாளர்களும், அமைப்புசாரா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும், கலந்துகொண்டு
ஏன் மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழக விவசாயிகள் கூறுகிறார்கள் என்பதற்கான கற்காலம் தொட்டு தற்காலம் வரை உள்ள நியாயத்தை அருகில் இருக்கும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறும் விதமாக உரையாற்றினார்கள்.
தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பது தமிழர்களின் நோக்கமல்ல என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்வில் தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு கலந்துகொண்டு காவிரி நீர் உரிமை மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தன்னுயிரை தீக்கிரையாக்கி மாண்ட விக்னேஷ் திருவுருவப்்படத்தை திறந்து வைத்தார். அரு.சீர். தங்கராசு தலைமை தாங்கினார். எட்டு வழி சாலை எதிர்ப்பு குழு தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட மாநிலத்தில் மக்களுக்காக மண்ணுக்காக போராட கூடிய பல்வேறு சமூகப் போராளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்தப் போராட்டமானது ரயிலடி தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற இருந்ததாகவும் திடீரென காவல்துறையின் அனுமதியில் சிக்கல் ஏற்பட்டதால் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறினார்கள்.