மாநாடு 31 March 2023
நமது மாநாடு இதழில் சாதாரணமாக எந்த ஒரு செய்தியையும் போடுவதில்லை என்பது நமது வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தியை எடுத்து போட்டு நன்கு ஆய்வு செய்து இதனால் இது நடைபெற வாய்ப்பு இருக்கிறது தடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை கொடுக்கும் விதமாக பல்வேறு செய்திகளையும் நாம் வெளியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் போய் சேரும் அளவிற்கு செய்து கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியத்தால் பல்வேறு நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருவதை நாம் காண முடிகிறது அதேபோலத்தான் தற்போது V.முருகையா என்கிற சிற்றுந்து மருத்துவக் கல்லூரி சாலையில் விபத்து ஏற்படுத்தி தஞ்சையில் பெரும் பரப்பரப்பை உண்டாக்கி இருக்கிறது. இது சம்பந்தமாக இப்படி எல்லாம் நடைபெறும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி “தஞ்சாவூரில் மினி பஸ்களின் அத்துமீறல் அடக்குவார்களா அதிகாரிகள்” என்கிற தலைப்பில் செய்திகள் வெளியிட்டிருந்தோம் அதுவும் தற்போது விபத்து ஏற்படுத்தியிருக்கும் V. முருகையா சிற்றுந்தை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் லிங்க் இதோ: https://maanaadu.in/thanjavur-mini-bus/
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இருந்து மானோஜிபட்டி செல்லும் v.முருகையா(VMT) என்கின்ற சிற்றுந்து மருத்துவ கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களிலிலும்,
வீடியோ லிங்க்:https://youtu.be/SbtOIh3JHIA
1 காரிலும் மோதி விபத்தை ஏற்படுத்தி அருகே இருந்த மின்சார கம்பத்தில் இடித்து நின்றது.
இந்த விபத்தில் சாலை ஓரத்தில் நின்று இருந்த திருவையாறு அருகே உள்ள வைத்தியநாதன் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த 35 வயதுடைய மாசிலாமணி, 32 வயதுடைய கௌரி, 2 வயது குழந்தை ஹேம்நாத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது அவர்கள் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்துக்கான காரணம் என்ன என்பதை போக்குவரத்து காவலர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிய வருகிறது.
தஞ்சாவூரில் மினி பஸ்கள் அத்துமீறுவதை அனைவருமே அறிந்திருக்கும் போது அதிகாரிகள் அறியாமலா இருப்பார்கள். விபத்து நடந்த பிறகு காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்பவர்கள் விபத்து நடக்காமல் இருப்பதற்காக இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
விபத்தை தடுப்பார்களா? அல்லது வேடிக்கை பார்ப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.