அனைத்து நாட்களிலும் 2 நிமிடம் மட்டுமே சாத்தப்படும் கோயில்.
ஒவ்வொரு கோயிலுக்கும் சிறப்புகள் உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்.
எல்லா இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டு, கோயிலைச் சுத்தம் செய்து பின்னர் சிறப்புப் பூஜை செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு விடுவது வழக்கம்.
ஆனால் திருப்பதி போன்ற சில கோயில்கள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக வருவதால் நள்ளிரவில் கூட தரிசிக்கலாம். ஆனால் திருப்பதி கோயில் கூட ஒரு குறிப்பிட்ட மணி நேரம் மூடப்பட்டுத்திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு எல்லா நாட்களிலும் எல்லா நேரமும் கோயில் திறந்திருக்கக் கூடிய அதிசய கோயிலாக உள்ளது.
கோயில் விபரம்:
கோயில் பெயர்: திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்
கோயில் அமைந்துள்ள இடம்:
திருவார்ப்பு, கோட்டயத்திலிருந்து 6-8 கிமீ தொலைவில் உள்ளது.
மூலவர் : கிருஷ்ணன்
கோயில் திறக்கப்படும் நேரம்: அதிகாலை 2 மணிக்குக் கோயில் திறக்கப்படுகிறது.
3 மணிக்குச்சிறப்பு பூஜை அதாவது உஷ பாயசம் எனும் உணவு கிருஷ்ணருக்குப் படைக்கப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்த திருவார்பு கோயில் 1500 வருடங்கள் பழமையான கோயில். இந்த கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல் ஆண்டின் எல்லா நாட்களும் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
சம்பிரதாயத்திற்காகக் கோயில் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.
பசியைத் தாங்காத கிருஷ்ணர்
மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ணர் பசியைத் தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால் கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி கொடுக்கப்படுகிறது.
அரக்கன் கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் அந்த கிருஷ்ணரே இந்த கோயிலில் மூலவராக அமர்ந்தார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
அபிஷேகம் முடிந்ததும் நைவேத்தியம்:
தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தைக் குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. அவர் பசியாக இருப்பார் என்பதால், பின்னர் உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் உலர்த்தப்படும்.
கிரகணத்தின் போது மூடப்படாத கோயில்:
திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் என இந்து கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் கிருஷ்ணர் பசியைத் தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.
ஒரு முறை கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டது. அப்போது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை கீழே வீழ்ந்திருப்பது கண்டனர். அந்த நேரத்தில் வந்த ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் இப்படி நடந்ததாகக் கூறியுள்ளார். அதன் காரணமாக, அப்போதிலிருந்து, கோயில் நடை தினமும் வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
பிரசாதம் பெறாமல் போகக் கூடாது
இந்த கோயிலில் நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.
இரவு 11.58 மணிக்குக் கோயில் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? எனச் சப்தமாகக் கேட்பார். அதே போல் இந்த கோயிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
பசியால் வாட மாட்டீர்கள்:
இந்த கோயிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போது வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.
திருவிழா, சிறப்பு நாட்கள்:
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
எப்படி கோயிலுக்குச் செல்லலாம்:
கோயில் முகவரி:
திருவார்பு கிருஷ்ணன் கோயில், திருவார்பு – 686 020, கோட்டயம் மாவட்டம், கேரளா.
கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் திருவார்பு கோயில் அமைந்துள்ளது. விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால், கொச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து, கோட்டயம் வந்து கோயிலுக்குச்செல்லலாம். தமிழ் நாட்டிலிருந்து கோட்டயத்திற்குப் பேருந்து வசதிகளும் உள்ளன.
Location: https://goo.gl/maps/35ze1QQyQamcSchD9
I think this internet site holds some really good information for everyone. “There is nothing so disagreeable, that a patient mind cannot find some solace for it.” by Lucius Annaeus Seneca.