மாநாடு 7 February 2022
தினந்தோறும் நமக்காக பணியாற்றுகிற மக்கள் நல காவலர்கள்,மக்கள் நல பணியாளர்கள் எத்தனையோ பேர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்.அவர்களில் ஒவ்வொருவரும் நமக்கான பணிகளை மிகவும் திறம்பட செய்துகொண்டிருக்கிறார்கள் அப்படிதான் இன்று 7-2-2022 மதியமும் நடந்தது. இடியே விழுந்தாலும்,மழை பெய்தாலும் ,புயல் அடித்தாலும், வெயில் சுட்டெரித்தாலும், தனது கடமையை செய்வதற்காக காவல்துறை பணியில் இருக்கின்ற அத்தனை காவலர்களும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நமக்காக தான் இந்த வேலைகள் எல்லாம் செய்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம் என்று தெரியவில்லை. நமக்காக பணிபுரிபவர்கள் சிலர் அலுவலகங்களிலும் சிலர் மருத்துவத் துறையிலும் சிலர் போக்குவரத்துத் துறையிலும் இப்படி எண்ணற்ற துறைகளில் எத்தனையோ உறவுகள் நமக்காக பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த சமூகத்தில் அவர்களால் தான் நாம் நம் குடும்பங்களை பிரிந்து வெளியே வந்தாலும் கூட நிம்மதியாக நமது பணிகளை செய்ய முடிகிறது. கொரோனா என்ற ஒரு கொடிய நோய் காலம் தீவிரமாக இருந்தது.அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகமாக வேலை செய்தவர்களில் மருத்துவ பணியாளர்களும் துப்புரவு தொழிலாளர்களும் முதன்மையானவர்கள். இவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தனது குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்களை காக்கும் மகத்தான பணியில் காவலர்களும் நம்மை காவல்காத்தார்கள்.
நாம் இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது மருத்துவப் பணியாளர்களை செவிலியர்களை துப்புரவு தொழிலாளர்களை நாம் போற்றி பாராட்டினோம். அது தேவை தான் ஏனென்றால் ஒவ்வொருவரின் முதுகில் தட்டிக் கொடுக்கும் கை தான் அந்த பணியாளர்களை முன்னின்று இன்னும் பல சேவைகளை செய்ய வைக்கும் அதேநேரத்தில் போக்குவரத்தை சரி செய்வதற்காக அதாவது அந்த நேரங்களில் வெளியே வரக்கூடாத மக்களை தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தடுத்து தனது கடமையை சரியாக செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா? என்றால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்குக் கூட மதியம் 12 மணி அளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற அண்ணா சிலை பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரி வெங்கட்ராமன் அவர்கள் நின்று கொண்டு சரி செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் முன்னால் போய்க் கொண்டிருந்தவர் பிரேக் பிடித்ததில் பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வாகனத்தை ஓட்டி வந்தவர் தவறிக்கீழே விழுந்து விட்டார் .அவரைப்போய் உடனடியாக தூக்குவதற்காக சென்ற காவல்துறை அதிகாரி அவரை தூக்கிய போது தான் தெரிந்தது அவர் மாற்றுத்திறனாளி ஒரு கால் செயற்கைக்கால் என்று தெரியவந்தது செயற்கைகால் கீழே தனியாக கழன்று விழுந்துவிட்டது இதை எதிர்பார்க்காத காவலர் வெங்கட்ராமன் அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வாகனங்களையும் சரி செய்துகொண்டே ஒரு குழந்தையை பெற்ற தாய் தூக்குவது போல தன் தோளில் தூக்கி அந்த பயணியை போட்டுக்கொண்டு ஓரத்திற்கு சென்று முதல் உதவி செய்தது அனைவரையும் நெகிழச்செய்தது இப்படியான பல அதிகாரிகளையும் நாம் பாராட்ட வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது சாலை விதிகளை கடைபிடித்து செல்வதுதான். போக்குவரத்துக்காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் பல நேரங்களில் வாகனத்தில் வேகமாக வருகின்ற அந்த மாணவர்களுக்கு நல்ல ஆசிரியரைப்போல கண்டித்தும், அலுவலகப்பணிகளுக்கு வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சாலை விதிகளை மதிக்காமல் மீறுபவர்களை கண்டிப்பதில் நல்ல அண்ணன் தம்பிகள் ,தந்தையாகவும் இருந்து பணியாற்றுகிறார்கள் இப்படியான எண்ணற்ற அதிகாரிகளை பாராட்டுவதே இந்த செய்தியின்.நோக்கம்
மாநாடு இதழ் ஐயா வெங்கட்ராமன் அவர்களையும் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கின்ற இவர்களை எல்லாம் நல்லபடியாக பணிசெய்ய ஊக்குவித்து கொண்டிருக்கின்ற ஐயா.ரவிச்சந்திரன் அவர்களையும் இன்னும் எத்தனை பெயர்கள் பாராட்டுக்குரியவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரையும் மாநாடு இதழ் மனதார பாராட்டி வாழ்த்துகின்றது.
Video link:
காவலர் செயலுக்கு மனமார்ந்த பாராட்டு கள்.