Spread the love

மாநாடு  9 February 2022

மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இவ்வாறு பேசியுள்ளார்.

இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நமது புகழ்மிக்க வரலாற்றால் நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த முடியும் இதை வரலாறு நமக்கு கற்றுத்தரும் அறிவை பிரகாசிக்க வைக்கும் தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பள்ளிக் குழந்தைகள் அறியப்பட வேண்டும்.இந்தியாவின் நாகரீகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், விடுதலைப் போராட்டத்திலிருந்து சமூக நல்லிணக்கத்தை விவரிக்க வேண்டும். நாம் சுதந்திரத்தை அடைந்து பிறகும் கூட, காலனித்துவ சாயல் நமது கல்வி முறையில் நீடிப்பது கவலையளிக்கிறது.தேசிய கல்விக் கொள்கை வெற்றிகரமாக அமலாக்கப்படும்போது இது அகற்றப்பட வேண்டும். தேசியக்கல்விக் கொள்கை மாநிலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் முழுமையான ஆர்வத்துடன் அமலாக்கப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்று வகுப்பறைகளில் டிஜிட்டல் பயன்பாட்டையும், நவீன கருவிகளையும், மைக்ரோ வகுப்புகளையும் தேவையானதாக மாற்றி விட்டது. இனிமேலும் கல்வி முறை பழைய நிலையிலேயே நீடிக்க இயலாது.தனியார் மற்றும் பொதுக்கல்வி நிறுவனங்கள் புதிய நிலைமைகளை ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

16330cookie-checkகல்வி முறை பழைய நிலையிலேயே நீடிக்காது குடியரசு துணைத்தலைவர் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!