மாநாடு 11 February 2022
நடைபெறவிருக்கிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் லேசாக அச்சிடப்பட்டு, சிறிய அளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அனுமதி இன்றி திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டார்கள்.அவர்களிடம் தொடர் பேச்சி வார்த்தை நடத்திய போலீசார் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள்.
நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சின்னம் சிறிதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.