Spread the love
மாநாடு 15 February 2022
எவ்வளவு நல்ல மனசு சிம்புக்கு என்று திரையுலகில் பலரும் பாராட்டுகிறார்கள் சிலம்பரசன் அவர்களை அப்படி என்ன செய்தார் சிம்பு பார்க்கலாம்.
சிம்பு என்றால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.டப்பிங் பேச வர மாட்டார் அவரால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என பொதுவாக திரையுலகில் பலரும் கூறுவதுண்டு அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக அவரின் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஒருபக்கம் சத்தமில்லாமல் பலருக்கும் அவரால் முடிந்த உதவிகளையும் சிம்பு செய்து வருகிறார். அவரை அளவு கடந்து நேசிக்கும் ரசிகர்களும் ஏராளமாக உள்ளார்கள்.
சிம்பு நடித்த மன்மதன் படத்தை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். இவர் தனுஷ் நடித்த திருடா திருடி படத்தை தயாரித்தவர். அதாவது, காதல் கொண்டேன் ஹிட்டுக்கு பின் அவரை வைத்து முதன் முதலாக படத்தை தயாரித்தவர் இவர். அப்படத்தின் வெற்றியே தனுஷின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
சில படங்களால் நஷ்டமடைந்த கிருஷ்ணகாந்த் ஒரு கட்டத்தில் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானார். மாரடைப்பு காரணமாக 2020ம் ஆண்டு இறந்து போனார்.
இவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், சந்திரகாந்த், உதயகாந்த் என 2 மகன்களும் இருக்கிறார்கள்.
கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு பின் அவரின் குடும்பம் வறுமையில் வாடியது.ஆனால், தனுஷ் உட்பட திரைப்படத்துறையினர் யாரும் அவர்களுக்கு உதவவில்லையாம். தற்போது அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதை கேள்விப்பட்ட சிம்பு சில லட்சங்கள் கொடுத்து ஒரு வீட்டை லீஸுக்கு வாங்கி கொடுத்துள்ளாராம். மேலும், மன்மதன் 2 படத்தை எடுத்தால் உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி தருகிறேன் எனவும் உறுதியளித்துள்ளாராம்.
எனவே, தனுஷை விட சிம்பு எவ்வளவோ மேல் என திரையுலகினர் பேசி வருகிறார்களாம்.
18070cookie-checkதனுஷ் கைவிட்டார் சிம்பு கைகொடுத்தார்

Leave a Reply

error: Content is protected !!