மாநாடு 16 February 2022
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெறும்.
விவரம் வருமாறு:- தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும்,
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேல திருப்பூந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை,மெலட்டூர், அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும் எண்ணப்படும்.
கும்பகோணம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் கும்பகோணம் கருப்பூர் ரோடு அரசு கலைக் கல்லூரியிலும்,
அதிரம்பட்டினம் நகராட்சியில் பதிவான வாக்குகள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படும்.
பட்டுகோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட உள்ளன.
ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் , திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை நால் ரோடு அருகில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படும்.
பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படும்.