மாநாடு 17 February 2022
உலக அளவில் நொடிக்கு நொடி சைபர் குற்றங்கள் பல்கிப்பெருகி வருகிறது.
இதை தடுக்க உலகமே பல புதிய தொழில்நுட்பங்களையும் புதிதுபுதிதாக வியூகங்களையும் வகுத்து வருகிறது அப்படி இருக்கையில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இவ்வகையான குற்றங்கள் அதிகரித்துள்ளது இதைத்தடுக்க காவல்துறையும் எவ்வளவோ வழிகளை கையாள்கிறது.
அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்த புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளார்கள் இது தெரிந்த மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் .
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி அதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு பல மாற்றங்களைச்செய்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சைபர்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
பொதுமக்கள் இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சைபர் காவல்துறையினர் உடனடியாக தகவல் அளித்து அந்த கணக்கை முடக்கி மோசடி செய்தவர்கள் பணம் எடுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
இதன் மூலம் மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.