மாநாடு 1 March 2022
இன்று பிறந்தநாள் காணும் தமிழகத்தின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல கட்சித் தலைவர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
மார்ச் மாதம் 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று தனது தொண்டர்களுக்கும் கட்சிக்காரர்களும் வேண்டுகோள் வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன் என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி அவர்களின் தனித் திறனை கண்டு ஆராய்ந்து அவர்களுக்கான கல்வியை எனது தலைமையிலான அரசு செய்யும் அதை திறம்பட நடக்கிறதா என்பதை என் நேரடி பார்வையில் கண்காணித்து கொண்டிருப்பேன். நான் முதல்வன் என்கிற திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும் கூட
எதிர்காலத்தில் இந்த திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கியதன் காரணமாக நான் இன்று மேம்பட்டு நல்ல நிலையில் இருக்கிறேன் என்று மாணவர்கள் சொல்லும்போதுதான் இந்தத் திட்டம் பெருமை அடையும் .அந்த நோக்கத்தில் தான் நான் இதைச் செய்கிறேன் எல்லோரையும் விட நம்மிடம் சிறந்த செல்வம் ஒன்று இருக்கிறது அதுதான் இளைஞர்கள் என்ற செல்வம்.அந்த இளைஞர்களை,மாணவர்களை நல்ல உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நான் ஒரு தாயைப் போல இருந்து பணியாற்றுவேன் என்று பேசினார்.
பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நமது மாநாடு இதழின் சார்பாக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
https://twitter.com/SeemanOfficial/status/1498521102473396224?t=TOVAuDGA0Lw6RyUkbLUQOQ&s=19